Thursday, April 28, 2011

மகிந்தாவை பிடித்த சனியனும் - கிடைத்த வடைகளும்


            என்ன மக்களே எப்படி இருக்கீங்க முந்தநாள் ஒரு பதிவு படிச்சேன் அதுல நம்ம பங்காளி(அதான் நம்ம எதிரி) மகிந்தா ராஜபக்ஷே அவர் தமிழ் பேசினா எப்படி இருக்கும்னு பதிவு போட்டிருந்தாங்க ஆனா அவருக்கு 2011 ம் ஆண்டு கலிகாலம் னு தெரியல . ஆமாங்க அவருக்கு சனியன் உச்சத்துல இருக்காம். அப்படின்னு நம்ம உடுமலைபேட்டை உச்சத்துல இருக்கிற  அம்முனண்டி ஜோசியர் கூறினார்( யாருக்கு தெரியும் இப்படி ஒருத்தர் இருக்கார் என்று)  
  
       உங்களுக்கே தெரியும் நட்பு நாடான நம்ம ஸ்ரீலங்கா இல்லங்க நம்ம தமிழ் ஈழம் மலர்வதற்காக பல பேர் உயிரை கொடுத்திருக்கிறார்கள். அவ்ரகளுக்காக நம்ம தமிழ் நாட்டுல இருந்தும் தீக்குளிச்சு இருக்காங்க. இப்படி இருக்கும் போது 2011   ம் ஆண்டு நடந்த போர் குற்றத்திற்காக ஐ.நா நியமித்த ஐவர் குழு அறிக்கையை பான்கி மூனிடம் சமர்பிக்க கூடாது என்று ராஜபக்ஷே பல போராட்டங்களை நடத்தினர் ஆனால் நடந்தது என்ன. (அதனால் இவருக்கு என்னுடைய சார்பாக உளுந்து வடை முடிஞ்ச நீங்க சாம்பார் கொடுங்க)  



      அடுத்து லிபியா நாட்டின் மீது ஐ.நா  ஆதரவு படைகள் தாக்குதல்  நடத்துகின்றன. அது லிபியக்கு மட்டும் இல்ல நம்ம ராஜபக்ஷேவிற்கும் பிடித்த சனியன். என்னன்னு பார்த்த நம்ம  ராஜபக்ஷேவும், லிபியா அமைச்சரும் நண்பர்களாம்(  ஆமா ரெண்டு பேருமே ஒரே கட்டிலில் படுக்கும் அளவிற்கு) . அதன் காரனத்தால் லிபியா அமைச்சர் மகிந்தாவிற்கு 500௦௦ கோடி டாலர்(சரியான தொகை எவ்வளவு என்று எனக்கு தெரியலங்க)  உதவி தொகை செய்வதாக  கூறி இருந்தார் ( மகிந்தா கண்ணா லட்டு திங்க ஆசையா) ஆனா நம்ம ஐ.நா  ஆதரவு படைகள் அந்நாட்டின் மீது போர் தொடுத்ததால் வடை போச்சு ( நம்ம ஓட்ட வடை தமிழ் மனம் ப்லோகுக்கு ஆசிரியர போனரே அந்த  மாதிரி இல்லங்க இந்த வடை)  

      அதவிட பெரிய வடை ( இது நம்ம டீ கடைல விக்கிற வடை. ஊசி போனது அல்ல )  நம்ம இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு கொடுத்து இருக்காங்க.( இந்த சனியன் அவருக்கு பக்கவாட்டுல வந்திருக்கு போல இருக்கு) அதாங்க உலக கோப்பை கிரிக்கெட்ல இலங்கை ஜெயிக்கணும்னு திருப்பதி போய் சாமி தரிசனம் பண்ணி அர்ச்சனை எல்லாம் பண்ணிட்டு வந்தார். இலங்கை அணியும் ஜெய்க்கல அவருக்க நம்ம பாகிஸ்தான் அதிபருக்கு கிடைச்ச மரியாதை கூட கிடைக்கல (இதை நம்ம பிரேம்ஜி கலைக்க போனா "என்ன கொடுமை சரவணா"). 

      ஆனா இப்ப பிடிச்ச சனியன் அவருடையா உச்சந்தலைல. ஆமங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க தலைவர் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி பத்தாவது இடத்திற்கு முன்னேறினர். ஆனா அவை கள்ள ஓட்டுக்கள் என்று அதே பத்திரிக்கை வெளிட்டுள்ளது. (நம்ம தமிழ் நாட்டுல கூட தேர்தல் நல்லபடியா முடிஞ்சு இருக்குங்க) இதனால் அவருடை நிலைமை மோசமாக உள்ளது (இது இவருக்கு கிடைச்ச ஆமை வடைங்க இது நம்ம சரவனபாவன்ல கிடைக்கும் போல இருக்கு) 

                    இதையும் நம்ம சூப்பர் ஸ்டார்  டயலாக்ல சொன்ன "ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான் ஆனா கைவிட்டுடுவன், நல்லவங்களுக்கு கொஞ்சமா கொடுப்பான் ஆனா கை விடமாட்டான்" வர்ட்டா. .. . . .. .  


                       



2 comments:

Mahan.Thamesh said...

எது எப்படியோ உலக நாடுகள் வடை கொடுக்க காத்திருக்கும் இந்த வேளையில்
இந்திய இனிப்பு கொடுக்குது என்ன செய்ய

Kirubakaran said...

எது எப்படியோ உலக நாடுகள் வடை கொடுக்க காத்திருக்கும் இந்த வேளையில்
இந்திய இனிப்பு கொடுக்குது என்ன செய்ய ////////
எது

என்னங்க செய்றது எவர் மீதோ உள்ள கடுப்புல சோனியா நம்ம தமிழ் மக்களை பலி வாங்குறாங்க