Sunday, April 24, 2011

பெண்கள் என்றால் சும்மாவா

        என்ன பதிவர்களே எப்படி இருக்கீங்க. நான் கடைசியா கோட்டி என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் போட்டேன். அதில் பல எழுத்து பிழைகள் இருப்பதாக பெயர் தெரியாத நபர் சொல்லி இருந்தார். தவறுக்கு வருந்துகிறேன்.
  

                 சரி அத  விடுங்க இன்னைக்கு ப்லோக்ள என்ன எழுதலாம் என்று யோசிச்சுட்டு இருந்தப்ப நேற்று ஒரு ப்ளோக் படித்தேன் அதில் பெண் எழுத்து பற்றி பல பேர் எழுதி இருந்ததாக படித்தேன். பெண் எழுத்து என்று சொல்கிறார்களே பெண் எழுத்து என்றால் என்ன? (தப்பா நினைக்காதிங்க என்ன இவன் இப்படி கேட்கிறான் என்று). பெண்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லை என்கிறார்களா அல்லது பெண்களுக்கே சுதந்திரம் இல்லை என்கிறார்களா.

   
                   நம்ம இன்னைக்கு 21 ம் நுற்றண்டுல இருக்கோம் இப்ப போய்  பெண் எழுத்து, பெண் சுதந்திரம் என்று பேசிட்டு இருந்தோம்ன அது நம்ம முட்டாள்தனம். ஏனா இன்னைக்கு நம்ம பெண்கள் பல துறைகளில் பல விதமான சாதனைகள் பண்ணிக்கிட்டு  இருக்காங்க மற்றும் முனேற்றம் அடைந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாமலே அவங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கூறி அவங்கல அடிமைபடுத்தக் கூடாது.( இப்ப மட்டும் என்ன அடிமையவாக இருக்காங்க)

   
        அவ்வளவு ஏங்க நம்ம அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா யாருங்க. இன்னைக்கு வரைக்கும் யாருக்கும் பயப்படாம தனது கட்சிய நடத்தி முதலமைச்சராக வேற ஆட்சி செய்திருக்காங்க. மேலும் பல இன்னல்களிலும்  2011 ம் ஆண்டு தேர்தல்ல போட்டி போட்டிருக்காங்க. இப்படி அரசியல்ல பல பெண்கள் சோனியாகாந்தி,மம்தா பானர்ஜி அவ்வளவு ஏங்க நம்ம குடியரசு தலைவர் பாத்திமாபீவி யாருங்க.


               அப்புறம் நம்ம கல்பனா சாவ்லா. இவங்கள பத்தி பேசின நம்ம அதிகமா பேசணும். இவங்கள விடுங்க நம்ம 21 ம் நுற்றண்டு பொண்ணுங்கள பத்தி  பேசலாம். இன்னைக்கு நம்ம நாட்டுல உள்ள ஐ.டி மற்றும் கால்சென்டர்களில் அதிகமாக வேலை பார்ப்பது நம்ம பெண்கள் தான். இன்னைக்கு வெளியாகும் அதிகமான புத்தகங்களில் பெண்களை பற்றி தான் எழுதுகிறார்கள். நான் ஒத்துக்கிறேன் பெண்கள் முன்னேற்றம் அடையவில்லை எங்கே படிப்பறிவு இல்லாத கிராமங்களில் அங்க கூட இப்ப கொஞ்சம் முன்னேற்றம் அடைதிருப்பதாக கேள்விபட்டிருக்கேன். அவ்வளவு ஏங்க நம்ம கிராமங்களில் மகளிர் குழு என்று ஆரம்பித்து பல பெண்கள் ஒன்று சேர்ந்து பலவிதமான சாதனைகள் செய்றாங்க. இப்படி நம்ம பெண்கள் கிராமங்களிலும் வளர்ச்சி பெறுகின்றனர். 


            நம்ம ப்லோக்ளையும் பல பெண்கள் எழுதுகிறார்கள் அவர்களுக்கு என்ன சுதந்திரம் இல்லையா என்ன.  இன்னைக்கு நம்ம குடும்ப நல நீதிமன்றதிட்க்கு போனம்ன பல பெண்கள் கணவன் சரி இல்லை என்று விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.( யாருக்கு தெரியும் யார் சரி இல்லை என்று)
இன்றும் ஊடகங்களில் பெண்கள் வேலை செய்கிறார்கள் அவர்களும் பல விதமாக எழுதுகிறார்கள் அப்போ எப்படி பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கூற முடியும்.

           என்னுடைய கருத்து  என்ன என்றால் பெண்கள் சுதந்திரம் அடைந்துவிட்டார்கள் ஆனால் அவர்களில் சில பேர் தாங்கள் தங்களுக்குள் என்ற ஒரு கோட்பாடுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் பெண்கள் மதம், இனம் மாறி ஆண்களை காதலித்து திருமணம்  செய்யும் அளவிற்கு  வளர்ந்து விட்டார்கள். இன்னும் சில கிராமத்து பெண்கள் நகரங்களுக்கு தனியாக வந்து படித்துக்கொண்டும் வேலை செய்துகொண்டும் இருக்கிறார்கள்


          இப்படி வளர்ந்துகொண்டு வரும் பெண்களை மீண்டும் நாம் பெண் அடிமை, பெண் எழுத்து என்று கூறி அவர்களுக்கு ஞாபாகப்படுத்த வேண்டாம். அவர்களும் எங்களுக்கு சமம் ஆனவர்களே இதுக்கு மேல என்னை விட உங்களுக்கு அதிகமா தெரிந்து இருக்கும்.   

                பிளாக் படியுங்க தவறு இருந்தால் மன்னிக்கவும் மற்றும் யாருடையா மனதையாவது பாதித்தால் மன்னிக்கவும்.  அப்புறம் பிடித்து இருந்தால் ஒட்டும் கமெண்டும் போடா மறந்திராதீங்க . 


           
 

      


        

No comments: