Thursday, April 28, 2011

மகிந்தாவை பிடித்த சனியனும் - கிடைத்த வடைகளும்


            என்ன மக்களே எப்படி இருக்கீங்க முந்தநாள் ஒரு பதிவு படிச்சேன் அதுல நம்ம பங்காளி(அதான் நம்ம எதிரி) மகிந்தா ராஜபக்ஷே அவர் தமிழ் பேசினா எப்படி இருக்கும்னு பதிவு போட்டிருந்தாங்க ஆனா அவருக்கு 2011 ம் ஆண்டு கலிகாலம் னு தெரியல . ஆமாங்க அவருக்கு சனியன் உச்சத்துல இருக்காம். அப்படின்னு நம்ம உடுமலைபேட்டை உச்சத்துல இருக்கிற  அம்முனண்டி ஜோசியர் கூறினார்( யாருக்கு தெரியும் இப்படி ஒருத்தர் இருக்கார் என்று)  
  
       உங்களுக்கே தெரியும் நட்பு நாடான நம்ம ஸ்ரீலங்கா இல்லங்க நம்ம தமிழ் ஈழம் மலர்வதற்காக பல பேர் உயிரை கொடுத்திருக்கிறார்கள். அவ்ரகளுக்காக நம்ம தமிழ் நாட்டுல இருந்தும் தீக்குளிச்சு இருக்காங்க. இப்படி இருக்கும் போது 2011   ம் ஆண்டு நடந்த போர் குற்றத்திற்காக ஐ.நா நியமித்த ஐவர் குழு அறிக்கையை பான்கி மூனிடம் சமர்பிக்க கூடாது என்று ராஜபக்ஷே பல போராட்டங்களை நடத்தினர் ஆனால் நடந்தது என்ன. (அதனால் இவருக்கு என்னுடைய சார்பாக உளுந்து வடை முடிஞ்ச நீங்க சாம்பார் கொடுங்க)  



      அடுத்து லிபியா நாட்டின் மீது ஐ.நா  ஆதரவு படைகள் தாக்குதல்  நடத்துகின்றன. அது லிபியக்கு மட்டும் இல்ல நம்ம ராஜபக்ஷேவிற்கும் பிடித்த சனியன். என்னன்னு பார்த்த நம்ம  ராஜபக்ஷேவும், லிபியா அமைச்சரும் நண்பர்களாம்(  ஆமா ரெண்டு பேருமே ஒரே கட்டிலில் படுக்கும் அளவிற்கு) . அதன் காரனத்தால் லிபியா அமைச்சர் மகிந்தாவிற்கு 500௦௦ கோடி டாலர்(சரியான தொகை எவ்வளவு என்று எனக்கு தெரியலங்க)  உதவி தொகை செய்வதாக  கூறி இருந்தார் ( மகிந்தா கண்ணா லட்டு திங்க ஆசையா) ஆனா நம்ம ஐ.நா  ஆதரவு படைகள் அந்நாட்டின் மீது போர் தொடுத்ததால் வடை போச்சு ( நம்ம ஓட்ட வடை தமிழ் மனம் ப்லோகுக்கு ஆசிரியர போனரே அந்த  மாதிரி இல்லங்க இந்த வடை)  

      அதவிட பெரிய வடை ( இது நம்ம டீ கடைல விக்கிற வடை. ஊசி போனது அல்ல )  நம்ம இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு கொடுத்து இருக்காங்க.( இந்த சனியன் அவருக்கு பக்கவாட்டுல வந்திருக்கு போல இருக்கு) அதாங்க உலக கோப்பை கிரிக்கெட்ல இலங்கை ஜெயிக்கணும்னு திருப்பதி போய் சாமி தரிசனம் பண்ணி அர்ச்சனை எல்லாம் பண்ணிட்டு வந்தார். இலங்கை அணியும் ஜெய்க்கல அவருக்க நம்ம பாகிஸ்தான் அதிபருக்கு கிடைச்ச மரியாதை கூட கிடைக்கல (இதை நம்ம பிரேம்ஜி கலைக்க போனா "என்ன கொடுமை சரவணா"). 

      ஆனா இப்ப பிடிச்ச சனியன் அவருடையா உச்சந்தலைல. ஆமங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க தலைவர் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி பத்தாவது இடத்திற்கு முன்னேறினர். ஆனா அவை கள்ள ஓட்டுக்கள் என்று அதே பத்திரிக்கை வெளிட்டுள்ளது. (நம்ம தமிழ் நாட்டுல கூட தேர்தல் நல்லபடியா முடிஞ்சு இருக்குங்க) இதனால் அவருடை நிலைமை மோசமாக உள்ளது (இது இவருக்கு கிடைச்ச ஆமை வடைங்க இது நம்ம சரவனபாவன்ல கிடைக்கும் போல இருக்கு) 

                    இதையும் நம்ம சூப்பர் ஸ்டார்  டயலாக்ல சொன்ன "ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான் ஆனா கைவிட்டுடுவன், நல்லவங்களுக்கு கொஞ்சமா கொடுப்பான் ஆனா கை விடமாட்டான்" வர்ட்டா. .. . . .. .  


                       



Sunday, April 24, 2011

பெண்கள் என்றால் சும்மாவா

        என்ன பதிவர்களே எப்படி இருக்கீங்க. நான் கடைசியா கோட்டி என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் போட்டேன். அதில் பல எழுத்து பிழைகள் இருப்பதாக பெயர் தெரியாத நபர் சொல்லி இருந்தார். தவறுக்கு வருந்துகிறேன்.
  

                 சரி அத  விடுங்க இன்னைக்கு ப்லோக்ள என்ன எழுதலாம் என்று யோசிச்சுட்டு இருந்தப்ப நேற்று ஒரு ப்ளோக் படித்தேன் அதில் பெண் எழுத்து பற்றி பல பேர் எழுதி இருந்ததாக படித்தேன். பெண் எழுத்து என்று சொல்கிறார்களே பெண் எழுத்து என்றால் என்ன? (தப்பா நினைக்காதிங்க என்ன இவன் இப்படி கேட்கிறான் என்று). பெண்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லை என்கிறார்களா அல்லது பெண்களுக்கே சுதந்திரம் இல்லை என்கிறார்களா.

   
                   நம்ம இன்னைக்கு 21 ம் நுற்றண்டுல இருக்கோம் இப்ப போய்  பெண் எழுத்து, பெண் சுதந்திரம் என்று பேசிட்டு இருந்தோம்ன அது நம்ம முட்டாள்தனம். ஏனா இன்னைக்கு நம்ம பெண்கள் பல துறைகளில் பல விதமான சாதனைகள் பண்ணிக்கிட்டு  இருக்காங்க மற்றும் முனேற்றம் அடைந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாமலே அவங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கூறி அவங்கல அடிமைபடுத்தக் கூடாது.( இப்ப மட்டும் என்ன அடிமையவாக இருக்காங்க)

   
        அவ்வளவு ஏங்க நம்ம அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா யாருங்க. இன்னைக்கு வரைக்கும் யாருக்கும் பயப்படாம தனது கட்சிய நடத்தி முதலமைச்சராக வேற ஆட்சி செய்திருக்காங்க. மேலும் பல இன்னல்களிலும்  2011 ம் ஆண்டு தேர்தல்ல போட்டி போட்டிருக்காங்க. இப்படி அரசியல்ல பல பெண்கள் சோனியாகாந்தி,மம்தா பானர்ஜி அவ்வளவு ஏங்க நம்ம குடியரசு தலைவர் பாத்திமாபீவி யாருங்க.


               அப்புறம் நம்ம கல்பனா சாவ்லா. இவங்கள பத்தி பேசின நம்ம அதிகமா பேசணும். இவங்கள விடுங்க நம்ம 21 ம் நுற்றண்டு பொண்ணுங்கள பத்தி  பேசலாம். இன்னைக்கு நம்ம நாட்டுல உள்ள ஐ.டி மற்றும் கால்சென்டர்களில் அதிகமாக வேலை பார்ப்பது நம்ம பெண்கள் தான். இன்னைக்கு வெளியாகும் அதிகமான புத்தகங்களில் பெண்களை பற்றி தான் எழுதுகிறார்கள். நான் ஒத்துக்கிறேன் பெண்கள் முன்னேற்றம் அடையவில்லை எங்கே படிப்பறிவு இல்லாத கிராமங்களில் அங்க கூட இப்ப கொஞ்சம் முன்னேற்றம் அடைதிருப்பதாக கேள்விபட்டிருக்கேன். அவ்வளவு ஏங்க நம்ம கிராமங்களில் மகளிர் குழு என்று ஆரம்பித்து பல பெண்கள் ஒன்று சேர்ந்து பலவிதமான சாதனைகள் செய்றாங்க. இப்படி நம்ம பெண்கள் கிராமங்களிலும் வளர்ச்சி பெறுகின்றனர். 


            நம்ம ப்லோக்ளையும் பல பெண்கள் எழுதுகிறார்கள் அவர்களுக்கு என்ன சுதந்திரம் இல்லையா என்ன.  இன்னைக்கு நம்ம குடும்ப நல நீதிமன்றதிட்க்கு போனம்ன பல பெண்கள் கணவன் சரி இல்லை என்று விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.( யாருக்கு தெரியும் யார் சரி இல்லை என்று)
இன்றும் ஊடகங்களில் பெண்கள் வேலை செய்கிறார்கள் அவர்களும் பல விதமாக எழுதுகிறார்கள் அப்போ எப்படி பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கூற முடியும்.

           என்னுடைய கருத்து  என்ன என்றால் பெண்கள் சுதந்திரம் அடைந்துவிட்டார்கள் ஆனால் அவர்களில் சில பேர் தாங்கள் தங்களுக்குள் என்ற ஒரு கோட்பாடுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் பெண்கள் மதம், இனம் மாறி ஆண்களை காதலித்து திருமணம்  செய்யும் அளவிற்கு  வளர்ந்து விட்டார்கள். இன்னும் சில கிராமத்து பெண்கள் நகரங்களுக்கு தனியாக வந்து படித்துக்கொண்டும் வேலை செய்துகொண்டும் இருக்கிறார்கள்


          இப்படி வளர்ந்துகொண்டு வரும் பெண்களை மீண்டும் நாம் பெண் அடிமை, பெண் எழுத்து என்று கூறி அவர்களுக்கு ஞாபாகப்படுத்த வேண்டாம். அவர்களும் எங்களுக்கு சமம் ஆனவர்களே இதுக்கு மேல என்னை விட உங்களுக்கு அதிகமா தெரிந்து இருக்கும்.   

                பிளாக் படியுங்க தவறு இருந்தால் மன்னிக்கவும் மற்றும் யாருடையா மனதையாவது பாதித்தால் மன்னிக்கவும்.  அப்புறம் பிடித்து இருந்தால் ஒட்டும் கமெண்டும் போடா மறந்திராதீங்க . 


           
 

      


        

Saturday, April 23, 2011

i am youth, walking from south, talking from mouth

           இன்னைக்கு எதாவது படம் பார்க்கலாம்னு நெட்ல போன ஒரு படம் பார்த்தேங்க. சரி அதன் எல்லோரும் படத்தை பார்த்திட்டு விமர்சனம் போடுறாங்களே என்று நானும் விமர்சனம் எழுதின எப்படி இருக்கும்னு ஒரு சின்ன ட்ரை அவ்வளவுதான். ஆனா படம் வந்து எவ்வளவு நாள்  என்று தெரியாது (எனக்கு மட்டும் இல்ல யருக்கும தெரியாது)

          சரி மேட்டருக்கு வருவோம் இதுக்கு மேல என்ன நீங்க அடிப்பிங்க( இப்பவே எவனோ படத்தை  போடுட என்று சொல்லுறான்)   
          
       படத்தோட பேரு "கோட்டி" (என்ன பேர கேட்ட உடனே அதிருத ). படத்தோட ஹீரோ, டைரக்டர் எல்லாமே சிவன் யாரோ புதுசு (என்ன செய்றது புதுசா எவன் வேனுமன்றலும் வரலாம் போல இருக்கு ) ஹீரோஜினி   யாரோ காவ்யாஞ்சலி . சரி பிகுரைதன் நல்ல இருக்கும்னு பார்த்தா ( என்ன செய்றது எல்லாத்தியும் சகிக்க வேண்டியது இருக்கு).  இதுக்கு மேல யாரயும் குறிப்பிட விரும்பல . 


      படத்தோட கதைன்னு பார்த்த ஆடுதொட்டி என்னும் இடத்தில் சரவணன்(சாய்குமார்)  மற்றும் துளசி (ஆர்யன்) என்ற    இரண்டு ரவுடி கும்பலக்கு நடுவே நடக்கும் ரிவெஞ்( எப்பதேன் நம்ம திருந்தப் போறோமோ ) கூடவே ஒரு ரவுடி கும்பல் தலைவனுக்கும் (சரவணன்)  மகனுக்க்ம் இடை  நடக்கும் பாச போராட்டம். இத ஒரு இரண்டு மணிநேரம் திரைக்கதை பண்ணிருக்காங்க அவ்வளவுதான்.


     இரண்டு ரவுடி கும்பலின் அறிமுகத்தோட படம் தொடங்குது. இதுல ரவுடி துளசி MLA வைய்  கொலை பண்ணுறாரு. இந்த கொலை கண்டுபிடிக்க  போலீஸ்  வருது ( போலிசாக வருவபவர் உண்மையா நல்ல பண்ணி இருக்காரு என்னத்த) போலீஸ் துளசியா அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் போடுகிறது அதற்கு அப்பறம் போலீஸ் கடைசியா தன வருவாங்க ( இது வழக்கம் தானே) இப்படி படம் போயிட்டு  இருக்கும் போது ஒருத்தர திடிர்னு  கட்டுரங்க அதங்க நம்ம ஹீரோ அப்புரம் என்ன உடன ஹீரோஜின் அப்புறம் அவங்களோட லவ். ஆனா உண்மை சொல்லுறேங்க இப்படி ஒரு காதல எந்த  ஒரு படத்துலயும் சொல்லி இருக்க மாட்டங்க ( இப்படி சொல்லுறேன் என்று தப்ப நினைக்க வேண்டாம் தைரியம் இருந்த நீங்க ஒருமுறை பாருங்க)
  .

   படத்துல என்னொரு காதலும் (காமெடியும்) இருக்கு. அதெங்க ஹீரோ தங்கச்சிக்கும்(ஏஜ் 16) ஹீரோஜின்  தம்பிக்கும் (ஏஜ் 10 ) மற்றும் எப்ப பார்த்தாலும் போன்ல பேசிகிட்டு இருக்கும் காதலன். ஆனர்  ஹீரோ,ஹீரோஜின்  லவ் சீன்ஸ் காமெடியோ காமெடி. இப்படி படம் போய்கிட்டு இருக்கும் போது  ஹீரோவின் அப்பா சரவணன் என்பதற்கு ப்லஷ்பக். ஒரு சீன்ல சரவணன் கால ஜெயிலில் இருந்து திரும்ப வரும் துளசி வெட்டிட்டு பத்து நாளில் சரவணன் கதை முடிப்பத டயலாக் கொடுக்கிறார். 
நம்ம சரவணனும் எதிர் டயலாக் கொடுக்கிறார் என் பையன் உன்ன பளிவங்குவன் என்று. இறுதில் ஹீரோ துளசி  கொன்று படம் முடிகிறது.( அப்பா இப்பயாச்சும் முடிச்சங்கேல)         


படத்தின் ஹைலட் சீன்ஸ் 

* அதிக இடங்களில் விஜயின் சுறா பட போஸ்டர் உள்ளது (அப்பா ஓடாத படாத இப்ப ஓட வைக்கிரன்களோ)
* ஹீரோ அழுவது (செம மொக்க) மற்றும் ஒரு ரூபாய் காஇன் போன்ல  லவ் பண்ணும்   நண்பன்  செம டச் 
*அப்புரம் இப்படி ஆனதில்லை மற்றும்  சண்டை சண்டை என்கிற பட்டு ( எப்படி தான்  இப்படி எல்லாம இசை அமிக்கிரங்க என்று தெரியல)
* பஞ்ச டயலாக் "  i am youth, walking from south, talking from mouth "  
* ஹீரோவும்,ஹீரோஜினும் அதுக்காக வீட்டில் சந்திக்கும் பொது ஹீரோஜின் தம்பி வந்து டிச்ற்றுப்  பண்ணுவது ( அங்க ஒன்னும் நடக்கல)  
* ரவுடி சரவணின் நண்பன் இறந்தவுடன் சரவணன் சொல்லும் டயலாக் " அவன் பொண்டாட்டி, பிள்ளை குட இருந்ததவிட என்குடதன் அதிகமா இருந்திருக்கான்" ( கண்டிப்பா சொல்லுறேன் எதுக்க்னு தெரியல)
*ஹீரோவின் தங்கச்சி தன்னை ஒருத்தன் சைட் அடிப்பதாக சொல்லி ஹீரோஜின் தம்பிதான் என்னும் இடம் பரவில்ல 
* ஒன்ன மிஸ் பண்ணிட்ங்க என்னன்னா ஹீரோ ஷர்ட்( இவர்தான் ஹீரோவா என்று கேட்கவைக்கும்)  


இல்ல படத்துல வருற ஹீரோஜின் நல்ல இல்ல அதான் இத பார்த்து மகிழ்ச்சியா இருங்க (வேற எதுவும் பண்ணாதிங்க )


         மற்றபடி படத்தின் டிரக்டரை பாராட்ட வேண்டும் ஏன் என்றால் எவ்வளவோ நம் தமிழ் சினிமா வளர்ந்து எங்கோ போய்கிட்டு  இருக்கும் பொது ரொம்ப ரிஸ்க் எடுத்து  ப்ரோடுசெரின் பணத்தை வேஸ்ட் பண்ணி இருக்காரு 


பதிவை படியுங்கள் பிடித்து இருந்தால் தவற்றை கூறவும் ( படம் நல்ல இல்லைன்னு எனக்கு தெரியும் என்ன செய்றது)  


  
        
          
  

Monday, April 18, 2011

வெட்டி வச்ச வெங்காயம் உருவான விதம் (இதை படித்துவிட்டு கண்ணீர் விடாதிர்கள்)

என்னடா இவன் தலைப்ப வைச்சுட்டு அது எப்படி உறவானது என்று சொல்ல  மொக்கை போடுறன் என்று தப்ப நினைக்காதிங்க ( மொக்க போடுவதுதான் என் வேலை) 

                  நானும் எல்லோரையும் போல சும்மா ஊர் சுதிட்டு, பலன பலான படங்களை பார்த்திட்டு , ( படம் பார்த்தது மட்டும் தான் வேறு எந்த கேட்ட பழக்கமும் இல்ல. நம்புங்க) , பிகுருங்கள சைட் அடிச்சிட்டு இருந்தேன். ஒரு பிகரும் செட் ஆகல.  சரின்னு இன்டர்நெட்   முலாம தேடலமுன்னு ட்ரை பன்னினேன் எந்த வெப்சைட் போனாலும் கிரெடிட் கார்டு  கேட்கிறான் (18 +க்கு  போன கிரெடிட் கார்டு  கேட்காம ரேசன் கார்ட கேட்பான் )      இருந்தாலும் சில சோசியல் வெப்சைட்ல அக்கௌன்ட் வைச்சேன் ஒன்னும் செட் ஆகல (ஆமா இவர் பெரிய சுவிஸ் பாங்க்ல அக்கௌன்ட் வைச்ச மாதிரி சொல்லுறாரு (ஐயோ என்னையும் அந்த  நேம் லிஸ்ட்ல சேர்க்க திங்க  ))

               அந்த சோகத்துல நல்ல தண்ணி அடிச்சிட்டு( நீங்க நினைக்கிற அந்த தண்ணி இல்ல)    யோசிச்சு பார்த்தப்ப   ஒரு யோசனை தோணிச்சு நம்ம ப்ளோக்ல ட்ரை  பண்ணலாம்னு. ஆனா  இங்க வந்துபார்த்த எவ்வளவு நல்ல சிந்தனைகள் உள்ளன. நான்  ப்ளாக் ஆரம்பித்தது  31 - 12 -2010  இவ்வளவு நாட்களாக  அனைவரின் ப்லோகுகலையும் படித்தேன். தற்போதுதான்  அவற்றின் தன்மை என்னவென்று தெரிந்தது.

                 எதோ என்னால் முடிந்தவரை நானும் எல்லோரயும் சிரிக்க வைப்பேன் (இப்ப மட்டும் என்ன எல்லோரும் அழுதுகிட்ட இருக்காங்க)  என்று ப்ளாக் ஆரம்பித்தேன். சரி நம்ம தான் ப்ளாக் அரம்பிசுட்டோமே அதற்க்கு தலைப்பு வைக்கனும்னு தோணிச்சு. இங்கதான் பல பேரு பலவிதம தலைப்பு வைச்சுட்டு பலான விதமா ப்ளாக் எழுதுறாங்க ( ய்ஜோவ் அந்த அருவாள இடுங்கிய இவன் உண்மை சொல்லுறான்). 

                அதனால நானும் பல தலைப்பு யோசிச்சு பார்த்தேன் அப்போ வெங்காயம்னு தோணிச்சு. என்னடா இது வெறும் வெங்காயம்னு வைச்ச ஒரு கிக் இருக்காதுன்னு அத வெட்டிவைக்கலாம்னு  தோணிச்சு    அதனாலதான் வெட்டி வைச்சுட்டேன்.( என்னடா புதுசா ப்லோகுக்கு வந்திருக்கனே எதாவது சொல்லுவன்னு பார்த்த இவனும் எல்லோரயும் போல இருக்கனே. அமைச்சரே  இவனை அந்தப்புர அழகிகள் உள்ள பாதலசிரெயில் அடையுங்கள் )   


என்னடா இவ்வளவு சொல்லிட்டு நடிகை  போட்டோ போட்டுட்டு சும்மா போவான்னு நினைச்சிங்கள. நன் ரொம்ப நல்லவன் அதனாலதான் கூடவே வெங்காயத்தை வெட்டி அதுல வெங்காய பக்கோடா ரெடி பண்ணி இருக்கேன் .
                    இந்த ப்ளாக் நல்ல இருந்தா படிச்சுட்டு கூடவே வெங்காய பக்கொடவ சாப்பிட்டு அதற்க்கு பிள்ளக ஒரு ஓட்டும் கூடவே கமெண்டும் போடுங்கள்.(டிப்ஸ்  வாங்கும் பழக்கம் இல்லை)  


எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்(எல்லாமே பிழையாகத்தான் இருக்கு அதுல என்ன எழுத்து பிழை)

 
 







  

Sunday, April 17, 2011

ப்ளாக் இல் நேரத்தை வீண் அடிப்பது எப்படி

அனைவருக்கும் வணக்கம். என்ன வணக்கம் சொல்லுறன் என்று பார்கிரிங்கள நான் இங்க புதுசு  அதன்.


(படம் பார்த்து பதில் சொல்லவும். இப்படத்தில் எ ர ரஹ்மான் இசை அமைத்த படங்களின்  பெயர் உள்ளது அவை எத்தனை)

இன்றைக்கு நம்முடை உலகம் எவ்வளவோ முன்னேறிக்கொண்டு போகிறது.  அதே   நேரத்தில் பல அழிவுகளும் ஏற்படுகின்றன. இந்த இடைபட்ட காலங்களில் மக்கள் பலர் சரக்கசிட்ட்டு ஜாலியா இருக்காங்க(நான் குடிக்கக மாட்டேங்க நன் ரொம்ப நல்லவன்) . இது அவ்னக்ளுக்கு சந்தோசம்   ஆனா நம்ம மாதிரி ஆட்களுக்கு ப்ளோக்ல எழுதுறதுதான் சந்தோசம் . 




                          ப்ளோக்ல எவ்வளவோ நல்ல செய்திகள் சொல்லபடுகின்றன. அனால் சிலர் நாங்களும் ப்ளாக் எழுதுறோம் என்பதற்க்காக ஓவரா மொக்க போடுறாங்க ( என்னையும் சேர்த்துதான் நானும் இனி ஓவரா மொக்க போடுவன் அதுக்கு எடுத்துகாட்டு தன இந்த ப்ளாக்) எனவே மக்களே  அனைவரும் ரசிக்கும் வகையில் உங்கள் ப்லோகுகள் இருக்கவேண்டும் .

இது என்னுடைய தொடக்கம் என்பதால் இதுக்கு மேல என்னால மொக்க போடமுடியல முடிந்தால் என்னையும் உங்கள் ப்ளாக் நண்பராக ஏற்டுக்கொளுங்கள்  நன்றி !