Friday, June 10, 2011

காமத்தின் தொடக்கம் காதலா? காதலின் முடிவு காமமா?

                    என்ன பதிவின் தலைப்பே சூப்பரா இருக்கா. (ஆமாங்க இப்படித்தான் போஸ்டர்ல தலைப்ப போட்டு கூடவே ரெண்டு ஸ்டீலையும் போட்டு எங்களமாதிரி பசங்கள தியட்டருக்கு வர வைச்சு ஒண்ணுமே காட்ட மட்டேங்குரங்க ஆனா இடைவேளை முடிஞ்சப்புறம் ரெண்டு சீன் போடுறாங்க. அந்தமாதிரி நான் உங்களை எமாதமாட்டேன் )  எனக்கு ரொம்ப நாளாவே இந்த சந்தேகம். என்னன்னு பார்த்திங்கன்ன இந்த பூமியில் வாழ்கிற எல்லா உயிரனமும் உடலுறவு கொள்கிறது எல்லாம் அந்த கொஞ்ச நேர சுகத்துக்காகதான். ஆனால் உடலுறவு கொள்ளும் அனைத்தும் இறுதியில் சந்தோசம்  அடைந்ததா என்பதுதான் என்னுடைய சந்தேகம். ஆனா எனக்கு ஒன்னு புரியுது எப்போ நாம "காதலுடன் காமத்தை அடைய நினைக்கிறோமோ அப்போதான் காமமும் வெற்றி அடைந்து காதலை வெற்றி அடைய செய்கிறது".  




                         இப்படி இருக்கும் போது நம்ம பசங்க இப்ப ரொம்பதான் பண்ணுறாங்க. எனன்னனா இப்ப நம்ம நாட்டுல மேற்கத்திய கலாச்சரம் பரவி இருக்கு. என்னன்னு பார்த்திங்கன்ன பொண்ணுங்க பசங்க கூட ரொம்ப நெருங்கி பழகுறாங்க இத நம்ம பசங்க பயன்படுத்தி ஏதோதோ  செய்றாங்க. அவங்களிடம்  காதல் என்ற வார்த்தைய பயன்படுத்தி அவர்களுடைய  காமத்தை அடைகிறார்கள்.   ( நான் எல்லாரையும் சொல்லலைங்க) . ஒருவன் தனது காமத்தை அடைய எவ்வளவோ வழிகள் இருக்க ஏன் காதல் என்ற வார்த்தைய பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. நம்ம பெண்களும் அதை நம்பி ஏமாந்துடுறாங்க.



             
              நீங்களே சொல்லுங்க இந்த உலகத்துல காதல் எவ்வளவு புனித்தமனது என்று அதே போல் காமமும் புனிதமானது. அப்படி இருக்கும்போது ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும்  காதலும்,காமமும் கலந்துள்ளது. இதை அவர்கள் தங்களுக்கு என்று தருணம் வரும்போது வெளிபடுதுக்கிரர்கள். காதலுக்கு எவ்வளவோ பேர் உதாரணமாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட காதலை காமத்துக்காக பயன்படுத்த வேண்டாம் .




                        காதலுக்கு எவ்வளவு உதாரணம் இருந்தாலும் காமத்துக்காக பல பேர் பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். ஏன் காமத்தில் உள்ள அணைத்து கலைகளையும் "காமசூத்ரா"  என்ற புத்தக வடிவில் எழுதியும் இருக்கிறர்கள் அதையே பலவிதமான படங்களாகவும் வெளியிட்டு இருக்கிறார்கள். அவை நம் மக்களிடமும் நல்ல வரவேற்பை கொண்டுள்ளது. காமத்தை அனுபவிக்கும் போது கிடைக்கும் சுகத்தை விட காதலில் உள்ள சுகமோ தனி.  காமத்துக்கு முடிவு உண்டு ஆனா காதலுக்கு முடிவு இல்லை. எனவே காமத்தை காதலுடன் அனுபவியுங்கள்.




              " காதல் நாம சுவாசிக்கிற கற்று மாதிரி எப்போதும் சுவாசிக்கணும். காமம் நாம  சாப்பிடுற சாப்பாடு மாதிரி எப்பப்போ பசிக்குதோ அப்பப்ப சாப்பிடனும்."                








                               "காதல் அனுபவம், காமம் அனுபவிப்பவது "