Saturday, October 1, 2011

Dr.ஸ்ரீனிவாசன்(பவர் ஸ்டார்) VS Dr.விஜய் (இளைய தளபதி)


                                                                        VS



Dr.ஸ்ரீனிவாசன்(பவர் ஸ்டார்)   VS  Dr.விஜய் (இளைய தளபதி)

என்னடா இது புது தலைப்பா இருக்கேன்னு பார்க்கிறிங்களா ஒன்னும் இல்லைங்க இன்றைய   நம்ம தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இவங்களோட பங்கு ரொம்ப முக்கியம்.

Dr.ஸ்ரீனிவாசன்(பவர் ஸ்டார்)  இவரை பற்றி பேசனும்னா பேசிகிட்டே போகலாம் அவ்வளவுக்கு இன்றைக்கு வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர். எப்படி ஒருத்தன் கிளமோர் இல்லாம ஹீரோ ஆகலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். ( அப்படின்னா நம்ம தனுஷ் மட்டும் எப்படி வந்தார்னு எங்கிட்ட நீங்க கேட்கக்கூடாது). பவர் ஸ்டார் இது அவருக்கு அவரே வைச்சுக்கிட்ட பட்டம். ஆனா டாக்டர் பட்டம் அப்படி கிடையாது அவரு படிச்சு வாங்கியது. எல்லோரும் படத்துல நடிச்சு டாக்டர் பட்டம் வாங்குவாங்க ஆன இவரு கொஞ்சம் வித்தியசம் ஆனவரு அதன டாக்டர் பட்டம் வாங்கிட்டு நடிக்க வந்திருக்காரு. என்ன ரொம்பவே வித்தியாசமா இருக்காரா.   




                                  இதெல்லாம் பெரிய விஷ்யமிலாங்க இவர் ஹீரோவா நடிச்ச லத்திகா  என்ற படம் 150 நாள் ஓடியிருக்குங்க. அதுவும் இப்ப பார்த்திங்கன்ன எந்த பெரிய ஹீரோவோட படமும் இப்படி ஓடினது இல்லைங்க. இதுல வேற இன்னும் மூன்று படங்கள் வேற நடிக்க போறாராம். அதுவும் ஒன்று நம்ம மங்காத்தா தள மாதிரி நெகடிவ் ரோல் அதன் பயங்கர வில்லன் மற்றும் நம்ம கமல்,சூர்யா, விக்ரம் மாதிரி சூப்பர் போலீஸ் வேடம் வேறு  நடிக்க போரருங்க.      ஆனா ஒண்ணுங்க இன்று யாருடைய  உதவியும் இல்லாம வளர்ந்து வரும் ஹ்ரோக்களில் இவ ரும் ஒருவர் சரிங்க இவரைப்பற்றி நான் நிறைய பேச விரும்பல நீங்க இந்த வீடியோ பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க


  

Dr.விஜய் (இளைய தளபதி)

                    நம்ம இளைய விஜய் இவர் தன்னுடிய சின்ன வயசுல இருந்து நடிக்கறாரு இன்னும் நடிச்சுக்கிட்டு  இருக்காரு ஆனா கொஞ்சம் கூட  வித்தியாசமா நடிக்க மாட்டேங்குறாரு. ஆனா இவரோட நடிப்பையும் பாராட்டி இவருக்கு டாக்டர் பட்டம் கொடுதிருக்க்ங்க( யாருக்கு தெரியும் இவங்க அப்பா எவ்வளவு பணம் கொடுத்து கொடுக்க சொன்னாருன்னு)    ஆமாங்க இவங்க அப்பா இல்லன்னா இவரு இன்னைக்கு இந்த சினமாவுல இருந்திருக்க முடியாது இது எல்லோருக்குமே தெரியும். இதுல வேற கட்சி  ஆரம்பிச்சு ஐயோ என்ன நடக்கப்போகுதோ இந்த தமிழ்நாட்டுல என்ன பண்ணுறது இன்னைக்கு எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கறான் நம்ம தமிழ் நாட்டுல. 
                    
            ஆனா ஒண்ணுங்க இவரை விட நம்ம பவர் ஸ்டார் எங்கையோ போகபோரருங்க. விஜய் அரைச்ச மாவை அரைக்கும் கிரைண்டர் மாதிரி நம்ம பவர் ஸ்டார் வானத்துல இருக்கும் ஸ்டார் மாதிரி எப்படி மின்ன போறார்னு கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க.
 
                               

Friday, June 10, 2011

காமத்தின் தொடக்கம் காதலா? காதலின் முடிவு காமமா?

                    என்ன பதிவின் தலைப்பே சூப்பரா இருக்கா. (ஆமாங்க இப்படித்தான் போஸ்டர்ல தலைப்ப போட்டு கூடவே ரெண்டு ஸ்டீலையும் போட்டு எங்களமாதிரி பசங்கள தியட்டருக்கு வர வைச்சு ஒண்ணுமே காட்ட மட்டேங்குரங்க ஆனா இடைவேளை முடிஞ்சப்புறம் ரெண்டு சீன் போடுறாங்க. அந்தமாதிரி நான் உங்களை எமாதமாட்டேன் )  எனக்கு ரொம்ப நாளாவே இந்த சந்தேகம். என்னன்னு பார்த்திங்கன்ன இந்த பூமியில் வாழ்கிற எல்லா உயிரனமும் உடலுறவு கொள்கிறது எல்லாம் அந்த கொஞ்ச நேர சுகத்துக்காகதான். ஆனால் உடலுறவு கொள்ளும் அனைத்தும் இறுதியில் சந்தோசம்  அடைந்ததா என்பதுதான் என்னுடைய சந்தேகம். ஆனா எனக்கு ஒன்னு புரியுது எப்போ நாம "காதலுடன் காமத்தை அடைய நினைக்கிறோமோ அப்போதான் காமமும் வெற்றி அடைந்து காதலை வெற்றி அடைய செய்கிறது".  




                         இப்படி இருக்கும் போது நம்ம பசங்க இப்ப ரொம்பதான் பண்ணுறாங்க. எனன்னனா இப்ப நம்ம நாட்டுல மேற்கத்திய கலாச்சரம் பரவி இருக்கு. என்னன்னு பார்த்திங்கன்ன பொண்ணுங்க பசங்க கூட ரொம்ப நெருங்கி பழகுறாங்க இத நம்ம பசங்க பயன்படுத்தி ஏதோதோ  செய்றாங்க. அவங்களிடம்  காதல் என்ற வார்த்தைய பயன்படுத்தி அவர்களுடைய  காமத்தை அடைகிறார்கள்.   ( நான் எல்லாரையும் சொல்லலைங்க) . ஒருவன் தனது காமத்தை அடைய எவ்வளவோ வழிகள் இருக்க ஏன் காதல் என்ற வார்த்தைய பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. நம்ம பெண்களும் அதை நம்பி ஏமாந்துடுறாங்க.



             
              நீங்களே சொல்லுங்க இந்த உலகத்துல காதல் எவ்வளவு புனித்தமனது என்று அதே போல் காமமும் புனிதமானது. அப்படி இருக்கும்போது ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும்  காதலும்,காமமும் கலந்துள்ளது. இதை அவர்கள் தங்களுக்கு என்று தருணம் வரும்போது வெளிபடுதுக்கிரர்கள். காதலுக்கு எவ்வளவோ பேர் உதாரணமாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட காதலை காமத்துக்காக பயன்படுத்த வேண்டாம் .




                        காதலுக்கு எவ்வளவு உதாரணம் இருந்தாலும் காமத்துக்காக பல பேர் பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். ஏன் காமத்தில் உள்ள அணைத்து கலைகளையும் "காமசூத்ரா"  என்ற புத்தக வடிவில் எழுதியும் இருக்கிறர்கள் அதையே பலவிதமான படங்களாகவும் வெளியிட்டு இருக்கிறார்கள். அவை நம் மக்களிடமும் நல்ல வரவேற்பை கொண்டுள்ளது. காமத்தை அனுபவிக்கும் போது கிடைக்கும் சுகத்தை விட காதலில் உள்ள சுகமோ தனி.  காமத்துக்கு முடிவு உண்டு ஆனா காதலுக்கு முடிவு இல்லை. எனவே காமத்தை காதலுடன் அனுபவியுங்கள்.




              " காதல் நாம சுவாசிக்கிற கற்று மாதிரி எப்போதும் சுவாசிக்கணும். காமம் நாம  சாப்பிடுற சாப்பாடு மாதிரி எப்பப்போ பசிக்குதோ அப்பப்ப சாப்பிடனும்."                








                               "காதல் அனுபவம், காமம் அனுபவிப்பவது "   











Sunday, May 1, 2011

கலைஞர், ரஜினி சந்திப்பு - அரசியல் தலைவர்களின் கிசு கிசுப்பு

                  இன்று நம்ம சூப்பர் ஸ்டாரின் ( இவருக்கு எவ்வளவு ஸ்டார் கொடுத்தாலும் மிகையாகாது) உலக ரசிகர்களுக்கு எல்லாம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். என்னன்னா அவருடை உடல் நிலை சரியாக இல்லை.  இவரை பற்றி நீங்க அதிகமா தெரிஞ்சுக்க வேண்டும் 
என்றாள் www.rajinifans.com என்ற வலை  முகவரிக்கு போய் பாருங்க.
         
               இங்க இன்னைக்கு அது இல்ல மேட்டரு. நம்ம மயிலாப்பூர்  இசபெல்லா மருத்துவமனைல தலைவர அட்மிட் பன்னிருக்கங்கன்னு கேள்விப்பட்டு நம்ம கலைஞர் மு.கருணாநிதி பார்க்கப் போய் இருக்கார். கூடவே நம்ம கனிமொழி அக்காவும் போயிருக்காங்க (என்ன செய்றது நம்ம ராஜா சார் ரொம்ப பிஸியாக இருக்காரு). இத பற்றி நம்ம அரசியல் வட்டராத்து பெரிய தலைங்க என்ன கிசு கிசு கிசுதங்க எனபதுதான் மேட்டர். 

முதலாவதாக நம்ம பா.ம.க தலைவர் ராமதாஸ் :  என்ன தலைவர் ரஜினியை பார்க்கப் போய் இருக்காரு "அடுத்த தேர்தல்ல தி.மு.க , அ.தி.மு.க கூட்டணி ஆட்சிக்கக்காக   ரஜினியை வைச்சு சமாதனம் பேசலாம்னு நினைசிருப்பரு"
(ஐயோ அப்போ  நம்மள வை.கோ மாதிரி நட்டாத்துல விட்டுருவாங்களா)
இவரு கோபமா பேசுறார் போல இருக்கு அதான் கண்ணாடிய தண்டி கண் வெளில வருற மாதிரி இருக்கார் 
திருமாவளவன் : தலைவர் (கருணாநிதி)எதுக்காக யார எப்போ எங்க பார்த்தாலும் நம்ம கூட்டணி தலைவர் கூடத்தான். ஆனா என்ன நம்மளுக்கு ஒட்டு போடாம எதிர் கட்சிக்கு ஒட்டு போட்டவர பார்க்கப் போய் இருக்காருன்னு நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமா இருக்கு. நம்ம தலைவர் தான் எதிரியையும் அணைக்கும் பண்பு கொண்டவர் ஆச்சே.(என்ன உள்குத்து இருக்கணு யார்க்கு தெரியும்)      
அ.தி.மு.க வை பார்த்து கேட்கிறேன் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழ  மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுப்பிர்களா 
 சிதம்பரம் :  இதை பற்றி சோனியாகிட்ட பேசினப்ப " இதை ஒரு காரணமா வைச்சு அடுத்த தேர்தல்ல 98  சீட்டு   கேட்டுப் பார்ப்போம் தரலைன்ன தனியா நிற்கிறதா சொல்லி பிரிஞ்சு அப்புறம் அ.தி.மு.க கூட கூட்டணி வைசுக்க்கலாம்னு " சொல்லுறாங்க என்ன செய்றது. பேசாம நம்ம கரைகுடிக்கே போயடலமா  
(என்ன தமிழ் நாட்டுல காங்கிரஸ் தனியா நிற்கிறதா தேபசிட்டே போய்டுமே)     
என்ன செய்றது இந்த முறையாவது கூட்டணி ஆட்சி கிடைக்குதான்னு பார்ப்போம் 
தங்கபாலு: ஹலோ யாரு மன்மோகன் சிங்க்ஹுங்களா "நம்ம தலைவரு என் மனைவி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது யாரோ செய்த சதியால் நான் அந்த தொகுதியில் நிற்க வேண்டியத போயிரிச்சு.  இதை பற்றி தலைவர் குரல் கொடுக்கல ஆனா நம்மளுக்கு ஒட்டு போடாம எதிர் கட்சிக்கு ஒட்டு போட்டவர பார்க்கப் போய் இருக்காரு". உடனே இத சோனியா அம்மாகிட்ட சொல்லி தேர்தல் ஜெயச்சபுறம் வாபஸ் வாங்க சொல்லுங்க.பெரும்பான்மை இல்லைன்னு சொல்லி உடனே ஆட்சியை கலைச்சு நடக்கும் இடைதேர்தல்ல நம்ம தனியா நின்னு ஆட்சிய அமைக்கலாம்.(என்ன ஒரு பேராசை)   
வந்து நினுடோம்ல மயிலப்பூர் தொகுதில  
விஜயகாந்த் : மரியாதை நிமித்தமாகவே தலைவர் ரஜினியை சந்திச்சு இருக்காரு. மற்றபடி எதுவும் இருக்காது. ஆனா நான் தான் என் மனைவி, மச்சான் பேச்சை கேட்டு கோட்டை விட்டுட்டேன். இல்லைனே இந்த தேர்தலையும் தனியா நின்னு 10 தொகுதியில ஜெய்சிருப்பேன்.( நம்ம வடிவேலு சொல்லுறாரு நீங்கதான் அடுத்த முதல்வரமே)    
என்ன செய்றது வேணாம் வேணாம்னு சொன்னாகூட என்ன கூப்பிட்டு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்க நான் என்ன செய்ய 
ஜெயலலிதா: என்ன கலைஞர் அடுத்த தேர்தலுக்கு இப்பவே வலைய விரிக்கிறார் போல இருக்கு(அதுக்குள்ள நம்ம ஒரு படத்த ரஜினியை வைச்சு பண்ணனும் ). அவருடையா வலைல மீன் மாட்டது. அவருடையா இந்த நடிப்பை எல்லாம் சினிமாவுல கதையா எழுத சொல்லணும். அப்புறம் நம்ம ஆட்சிக்கு வந்ததும் அவங்க குடும்பம்  சினிமா தயாரிக்கிரதை நிறுத்தனும் ( இதுக்காக போட மாதிரி படா என்ற சட்டத்தைய உருவாக்க முடியும்)  
இது நம்ம புரட்சிதலைவி செல்வி டாக்டர் ஜெ.ஜெயலலிதா 

இது நம்ம தெலுங்கு நடிகை ஜெயலலிதா 
                          இது ஒரு கற்பனை யாருடைய மனைதையவாது புண் படுத்தி இருந்தால் உடனே மெடிக்கல் ஷாப் போய் மருந்து வாங்கி போட்டுக்கங்க. கூடவே இந்த போட்டோக்களையும் பாருங்க. 


















Thursday, April 28, 2011

மகிந்தாவை பிடித்த சனியனும் - கிடைத்த வடைகளும்


            என்ன மக்களே எப்படி இருக்கீங்க முந்தநாள் ஒரு பதிவு படிச்சேன் அதுல நம்ம பங்காளி(அதான் நம்ம எதிரி) மகிந்தா ராஜபக்ஷே அவர் தமிழ் பேசினா எப்படி இருக்கும்னு பதிவு போட்டிருந்தாங்க ஆனா அவருக்கு 2011 ம் ஆண்டு கலிகாலம் னு தெரியல . ஆமாங்க அவருக்கு சனியன் உச்சத்துல இருக்காம். அப்படின்னு நம்ம உடுமலைபேட்டை உச்சத்துல இருக்கிற  அம்முனண்டி ஜோசியர் கூறினார்( யாருக்கு தெரியும் இப்படி ஒருத்தர் இருக்கார் என்று)  
  
       உங்களுக்கே தெரியும் நட்பு நாடான நம்ம ஸ்ரீலங்கா இல்லங்க நம்ம தமிழ் ஈழம் மலர்வதற்காக பல பேர் உயிரை கொடுத்திருக்கிறார்கள். அவ்ரகளுக்காக நம்ம தமிழ் நாட்டுல இருந்தும் தீக்குளிச்சு இருக்காங்க. இப்படி இருக்கும் போது 2011   ம் ஆண்டு நடந்த போர் குற்றத்திற்காக ஐ.நா நியமித்த ஐவர் குழு அறிக்கையை பான்கி மூனிடம் சமர்பிக்க கூடாது என்று ராஜபக்ஷே பல போராட்டங்களை நடத்தினர் ஆனால் நடந்தது என்ன. (அதனால் இவருக்கு என்னுடைய சார்பாக உளுந்து வடை முடிஞ்ச நீங்க சாம்பார் கொடுங்க)  



      அடுத்து லிபியா நாட்டின் மீது ஐ.நா  ஆதரவு படைகள் தாக்குதல்  நடத்துகின்றன. அது லிபியக்கு மட்டும் இல்ல நம்ம ராஜபக்ஷேவிற்கும் பிடித்த சனியன். என்னன்னு பார்த்த நம்ம  ராஜபக்ஷேவும், லிபியா அமைச்சரும் நண்பர்களாம்(  ஆமா ரெண்டு பேருமே ஒரே கட்டிலில் படுக்கும் அளவிற்கு) . அதன் காரனத்தால் லிபியா அமைச்சர் மகிந்தாவிற்கு 500௦௦ கோடி டாலர்(சரியான தொகை எவ்வளவு என்று எனக்கு தெரியலங்க)  உதவி தொகை செய்வதாக  கூறி இருந்தார் ( மகிந்தா கண்ணா லட்டு திங்க ஆசையா) ஆனா நம்ம ஐ.நா  ஆதரவு படைகள் அந்நாட்டின் மீது போர் தொடுத்ததால் வடை போச்சு ( நம்ம ஓட்ட வடை தமிழ் மனம் ப்லோகுக்கு ஆசிரியர போனரே அந்த  மாதிரி இல்லங்க இந்த வடை)  

      அதவிட பெரிய வடை ( இது நம்ம டீ கடைல விக்கிற வடை. ஊசி போனது அல்ல )  நம்ம இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு கொடுத்து இருக்காங்க.( இந்த சனியன் அவருக்கு பக்கவாட்டுல வந்திருக்கு போல இருக்கு) அதாங்க உலக கோப்பை கிரிக்கெட்ல இலங்கை ஜெயிக்கணும்னு திருப்பதி போய் சாமி தரிசனம் பண்ணி அர்ச்சனை எல்லாம் பண்ணிட்டு வந்தார். இலங்கை அணியும் ஜெய்க்கல அவருக்க நம்ம பாகிஸ்தான் அதிபருக்கு கிடைச்ச மரியாதை கூட கிடைக்கல (இதை நம்ம பிரேம்ஜி கலைக்க போனா "என்ன கொடுமை சரவணா"). 

      ஆனா இப்ப பிடிச்ச சனியன் அவருடையா உச்சந்தலைல. ஆமங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க தலைவர் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி பத்தாவது இடத்திற்கு முன்னேறினர். ஆனா அவை கள்ள ஓட்டுக்கள் என்று அதே பத்திரிக்கை வெளிட்டுள்ளது. (நம்ம தமிழ் நாட்டுல கூட தேர்தல் நல்லபடியா முடிஞ்சு இருக்குங்க) இதனால் அவருடை நிலைமை மோசமாக உள்ளது (இது இவருக்கு கிடைச்ச ஆமை வடைங்க இது நம்ம சரவனபாவன்ல கிடைக்கும் போல இருக்கு) 

                    இதையும் நம்ம சூப்பர் ஸ்டார்  டயலாக்ல சொன்ன "ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான் ஆனா கைவிட்டுடுவன், நல்லவங்களுக்கு கொஞ்சமா கொடுப்பான் ஆனா கை விடமாட்டான்" வர்ட்டா. .. . . .. .