Saturday, October 1, 2011

Dr.ஸ்ரீனிவாசன்(பவர் ஸ்டார்) VS Dr.விஜய் (இளைய தளபதி)


                                                                        VS



Dr.ஸ்ரீனிவாசன்(பவர் ஸ்டார்)   VS  Dr.விஜய் (இளைய தளபதி)

என்னடா இது புது தலைப்பா இருக்கேன்னு பார்க்கிறிங்களா ஒன்னும் இல்லைங்க இன்றைய   நம்ம தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இவங்களோட பங்கு ரொம்ப முக்கியம்.

Dr.ஸ்ரீனிவாசன்(பவர் ஸ்டார்)  இவரை பற்றி பேசனும்னா பேசிகிட்டே போகலாம் அவ்வளவுக்கு இன்றைக்கு வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர். எப்படி ஒருத்தன் கிளமோர் இல்லாம ஹீரோ ஆகலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். ( அப்படின்னா நம்ம தனுஷ் மட்டும் எப்படி வந்தார்னு எங்கிட்ட நீங்க கேட்கக்கூடாது). பவர் ஸ்டார் இது அவருக்கு அவரே வைச்சுக்கிட்ட பட்டம். ஆனா டாக்டர் பட்டம் அப்படி கிடையாது அவரு படிச்சு வாங்கியது. எல்லோரும் படத்துல நடிச்சு டாக்டர் பட்டம் வாங்குவாங்க ஆன இவரு கொஞ்சம் வித்தியசம் ஆனவரு அதன டாக்டர் பட்டம் வாங்கிட்டு நடிக்க வந்திருக்காரு. என்ன ரொம்பவே வித்தியாசமா இருக்காரா.   




                                  இதெல்லாம் பெரிய விஷ்யமிலாங்க இவர் ஹீரோவா நடிச்ச லத்திகா  என்ற படம் 150 நாள் ஓடியிருக்குங்க. அதுவும் இப்ப பார்த்திங்கன்ன எந்த பெரிய ஹீரோவோட படமும் இப்படி ஓடினது இல்லைங்க. இதுல வேற இன்னும் மூன்று படங்கள் வேற நடிக்க போறாராம். அதுவும் ஒன்று நம்ம மங்காத்தா தள மாதிரி நெகடிவ் ரோல் அதன் பயங்கர வில்லன் மற்றும் நம்ம கமல்,சூர்யா, விக்ரம் மாதிரி சூப்பர் போலீஸ் வேடம் வேறு  நடிக்க போரருங்க.      ஆனா ஒண்ணுங்க இன்று யாருடைய  உதவியும் இல்லாம வளர்ந்து வரும் ஹ்ரோக்களில் இவ ரும் ஒருவர் சரிங்க இவரைப்பற்றி நான் நிறைய பேச விரும்பல நீங்க இந்த வீடியோ பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க


  

Dr.விஜய் (இளைய தளபதி)

                    நம்ம இளைய விஜய் இவர் தன்னுடிய சின்ன வயசுல இருந்து நடிக்கறாரு இன்னும் நடிச்சுக்கிட்டு  இருக்காரு ஆனா கொஞ்சம் கூட  வித்தியாசமா நடிக்க மாட்டேங்குறாரு. ஆனா இவரோட நடிப்பையும் பாராட்டி இவருக்கு டாக்டர் பட்டம் கொடுதிருக்க்ங்க( யாருக்கு தெரியும் இவங்க அப்பா எவ்வளவு பணம் கொடுத்து கொடுக்க சொன்னாருன்னு)    ஆமாங்க இவங்க அப்பா இல்லன்னா இவரு இன்னைக்கு இந்த சினமாவுல இருந்திருக்க முடியாது இது எல்லோருக்குமே தெரியும். இதுல வேற கட்சி  ஆரம்பிச்சு ஐயோ என்ன நடக்கப்போகுதோ இந்த தமிழ்நாட்டுல என்ன பண்ணுறது இன்னைக்கு எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கறான் நம்ம தமிழ் நாட்டுல. 
                    
            ஆனா ஒண்ணுங்க இவரை விட நம்ம பவர் ஸ்டார் எங்கையோ போகபோரருங்க. விஜய் அரைச்ச மாவை அரைக்கும் கிரைண்டர் மாதிரி நம்ம பவர் ஸ்டார் வானத்துல இருக்கும் ஸ்டார் மாதிரி எப்படி மின்ன போறார்னு கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க.
 
                               

1 comment:

vijayarun said...

pongada pokkathtahvangala panniyum(powerstar)puliyum(ilayathalapathi) onna